நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி பிரதேசத்தில் கடந்த மூன்று தினங்களாக மின்சார தடை ஏற்பட்டுள்ளமையினால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதிக மழையுடன் கூடிய சீரற்ற கால நிலையின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளமையால் அப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் இது தொடர்பில் நோட்டன் மற்றும் கினிகத்தேன மின்சார சபைக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இது வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என மின் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.