சட்டவிரோதஉலோகம் கொண்டு வந்த ஒருவர் கைது

263 0

தங்கத்திற்கு சமனான உலோகங்களை சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவின் போதை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த உலோகங்கள் வாகனங்களின் விசேட உதிரிப் பாகங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துண்டுகள் மற்றும் தகடுகளாக காணப்பட்ட குறித்த உலோகங்கள் 617.63 கிராம் பாரமுடையதாகவும் இதன் பெறுமதி 19,95,425 ரூபா எனவும் சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்

Leave a comment