அத்தியவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாளை முதல் நேர்முக தேர்வு இடம்பெறவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து 7 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.