நாளை நள்ளிரவு முதல் தொடரூந்து தொழிற்சங்க கூட்டு பணிப்புறக்கணிப்பு

268 0

வேதனங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை காரணமாக நாளை நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு குறிப்பிட்டது போல் முன்னெடுக்கப்படும் என தொடரூந்து செயல்பாட்டு மேற்பார்வை உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டு தெரிவித்துள்ளது.

வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் உரிய பதில் கிடைக்காததால் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment