நோட்டன் விமல சுரேந்திர மின் நிலையத்தை அண்மித்த காசல்ரி பிரதேசத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் 500இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் மின்சாரம் தடைப்பட்டுள்ளமையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும், இது தொடர்பில் நோட்டன் மற்றும் கினிகத்தேன மின்சார சபைக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இது வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என மின் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
16.09.2017 அதிகாலை முதல் குறித்த பகுதியில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை தொடர்பில் கினிகத்தேன மின்சார சபை அதிகரிகளுக்கு அறிவித்த போதிலும் இது வரையில் எவ்வித நடவடிக்கையும் ஏற்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கை பேசிகள் செயலிழந்துமையால் வெளித்தொடர்பட்ட பிரதேசமாக காசல்ரீயூர் காணப்படுகின்றது.