ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரம் – சர்வதேச் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லை -ஆங் சான் சூகி

273 0

ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தாம் அஞ்சப்போவதில்லை என ஆங் சான் சூகி அறிவித்துள்ளார்.

மியான்மாரின் ரக்கின் சுயமாiநெ மாநிலத்திலிருந்து கிட்டத்தட்ட 4 லட்சம் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் பங்களேதே{க்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன், 40 ஆயிரம் பேர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

16 ஆயிரம் பேர் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தில் பதிவுசெய்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் அமைதிகாத்துவந்த ஆங் சான் சூகி , முதன்முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து பாகங்களிலும் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவது தமது நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக அந்நாட்டு இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

Leave a comment