கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – மின்சார சபை பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது

237 0

தமது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமது சேவை புறக்கணிப்பு தொடர்வதாக அந்த கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் இடம்பெறும் முறைக்கேடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியே இந்த சேவை புறக்கணிப்பு; முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர்களின் சேவை புறக்கணிப்பு இன்று 7வது நாளாகவும் தொடர்கிறது.

இது தொடர்பில் நேற்றையதினம் தொழிற்துறை அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனேவிரத்னவுடன், தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அது வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment