தமது மகனின் அரசியல் பிரவேசம் குறித்து சந்திரகா கருத்து

245 0

தமது மகனின் அரசியல் பிரவேசம் குறித்து மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் தற்போது வர்த்தகமாக மாறியுள்ளது.

அதிகாரத்துக்கு வருபவர்களில் சிலர் இயன்றளவு தமது பிள்ளைகளையும், உறவினர்களையும் அதற்குள் கொண்டுவரவே எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், தமது மகனையும் அரசியலுக்கு கொண்டுவருமாறு சிலர் கூறுவதாக சந்திரகா தெரிவித்துள்ளார்.

மக்கள்தான் அதனை தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment