சர்வதேச சாசன சட்ட மூலம் பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

252 0

பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சர்வதேச சாசன சட்ட மூலம் பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பின் டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலமானது, நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்தது.

எனினும், அந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட மாட்டாது என ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

எனினும், தனை காலவரையறை இன்றி ஒத்திவைப்பதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment