இலங்கையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்து தற்போது சமாதானத்தை நோக்கி நகர்கிறது.
ஆனால் இன்று நிலவும் சர்வதேச அழுத்தங்கள்; யுத்தம் ஒன்றை போன்ற மனநிலையிலேயே இலங்கையை வைத்துள்ளது.
இந்த நிலைமையிலிருந்து இலங்கையை விடுவித்து, சுயாதீமாக செயற்படுவதற்கு சர்வதேச சமூகம் அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.