பிரசன்ன உட்பட 6 பேருக்கு பிடியாணை!

226 0

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஆறுபேருக்கு, பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பூகொடை நீதவான் நீதிமன்றத்தால், இந்தப் பிடியாணை, நேற்று (18) பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு நகர சபையின் ஊடாக, கொழும்பு நகரத்தில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை, கிரிந்திவெல மாளிகாவத்த குப்பை முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு, குப்பைலொறிகள் மூலமாக எடுத்துசென்றபோது, அவற்றுக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழே, அறுவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு, பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றது. வழக்கு விசாரணையில் ஆஜராகாமையை அடுத்தே, அந்த அறுவருக்கும் பிடியாணை பிறப்பிக்குமாறும், அவர்கள் அறுவருக்கு பிணை வழங்கிய பிணையாளர்கள் அறுவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு, பூகொடை நீதிமன்ற நீதவான் நிலுபுலி லங்காபுர கட்டளையிட்டார்.

Leave a comment