இர்மாவை தொடர்ந்து கரீபியன் கடலில் மீண்டும் புயல்: டொமினிகாவை தாக்கியது

192 0

கரீபியன் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதற்கு மரியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் கரீபியன் கடலில் உள்ள டொமினிகா என்ற தீவு நாட்டை கடுமையாக தாக்கியது.

வடஅமெரிக்கா அருகே கரீபியன் கடல் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு இர்மா புயல் உருவாகி அமெரிக்காவின் புளோரிடாவை கடுமையாக தாக்கியது. முன்னதாக கியூ பாவை துவம்சம் செய்தது.

இந்த நிலையில் கரீபியன் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதற்கு ‘மரியா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் கரீபியன் கடலில் உள்ள டொமினிகா என்ற தீவு நாட்டை கடுமையாக தாக்கியது. அங்கு மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் கடுமையான காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டுகிறது. அதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வீடுகளில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானநிலையம் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.

Leave a comment