எகிப்தில் கலவர வழக்கில் 300 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரத்துவ மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
இப்போராட்டம் கலவரமாக மாறியது. நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்களும், 50-க்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 500 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் 300 பேருக்கு ஒரே நேரத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.