மரியா சூறாவளி மிகவும் ஆபத்தான சூறாவளியாக உருவாகியுள்ளது.

288 0

மரியா சூறாவளி மிகவும் ஆபத்தான நான்காம் தர சூறாவளியாக உருவாகி இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளை இந்த சூறாவளி எதிர்வரும் சில மணிநேரங்களில் கடுமையாக தாக்கவுள்ளது.

அண்மையில் இந்த பகுதிகளை தாக்கிய ஏர்மா சூறாவளி பயணித்த அதே பாதையில் மரியா சூறாவளியும் பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து கரிபியன் தீவுக்கூட்டங்களில் உள்ள ஃப்ரென்ச் தீவுகள், கோடெலோப் போன்ற பகுதிகளுக:கும், போர்டோ ரிகோ, டொமினிகா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற தீவுகளுக்கும் அமெரிக்க, பிரிடிஸ் வேர்ஜின் தீவுகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் சில ஏற்கனவே ஒரு மாக் காலப்பகுதியில் அடுத்தடுத்து தாக்கிய ஏர்மா மற்றும் ஹார்வி சூறாவளிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவையாகும்.

புதிய மரியா சூறாவளி எச்சரிக்கையை அடுத்து பிரிடிஸ் வேர்ஜினியா தீவுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசர நிலைமைய பிரகடணப்படுத்தியுள்ளார்.

Leave a comment