சென்னையில் இன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அசென்னையில் இன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.டைத்துள்ளனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் அந்த அமைப்புக்கு உதவி செய்து வருவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ஐ.எஸ். ஆதரவாளர் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, சாகுல் அமீது என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாகவும், நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சாகுல் அமீது, பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று கைது செய்யப்பட்ட சாகுல் அமீதையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீனையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் நாளை பூந்தமல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.