பொலன்னறுவைச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், சிறைச்சாலை மலசலக்கூடத்துக்கு அருகிலுள்ள கால்வாயில் இன்று(18) அதிகாலை 2.30 மணியளவில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவரைத் தடுப்புக் காவல் அதிகாரிகள், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சந்தேகநபர், பகமூன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோதுருவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதானவர் எனவும் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டவர் எனப், பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.