அனைத்து மாகாண சபைகளையும் கலைக்க அழுத்தம்

237 0

அனைத்து மாகாண சபைகளையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ம் திகதிக்கு முன்னதாக கலைத்து, ஒரே தினத்தில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கஃபே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஆளுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாட்டுக்கு வருமாறும் கோரப்பட்டுள்ளது.

20ம் திருத்தச்சட்டத்தை அமுலாக்க முடியாத பட்சத்தில், ஓரே தினத்தில் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை கைவிடக்கூடாது.

இதற்கான ஒரே தீர்வு அனைத்து மாகாண சபைகளையும் கலைத்து ஒரே தினத்தில் தேர்தல் நடத்துவதே என்றும் கஃபே வலியுறுத்தியுள்ளது.

Leave a comment