ஐக்கிய நாடுகள் சபையில் நாளை நடைபெறவுள்ள அமர்வின்; போது முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் நாளைய உரையின் போது, வட கொரியாவின் அணு ஆயுத திட்டம், சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு உட்பட பல வியடங்கள் கோடிட்டு காட்டப்படும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர், மேற்கொள்ளப்படும் முதலாவது சர்வதேச அமர்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.