கரேபியனில் உள்ள லீவாட் தீவுகளை நோக்கி ‘மாரியா’ சூறாவளி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வேகம் அபாயகரமாக வலுவடைந்து எதிர்வரும் 48 மணி நேர காலப்பகுதியினுள் இந்த பிராந்தியத்தை தாக்கும் என அமெரிக்க தேசிய சூறாவளி கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ‘ஈர்மா’ சூறாவளி பயணித்த அதே வழியின் ஊடாகவே இந்த சூறாவளியும் பயணிக்கவுள்ளதாக மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
கடந்த மாதம ‘எர்மா’ சூறாவளி மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பிராந்தியத்தில் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.
இந்த அனர்த்தத்தின் போது, குறைந்தது 37 பேர் பலியானதுடன், சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தன.