ஐக்கியநாடுகளின் 72ஆவது பொதுச் சபை அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது.
நாளை மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்துகொள்ளவுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மக்களை மையப்படுத்திய நிலையான உலகில் அனைவருக்கும் கௌரவமான வாழ்க்கை மற்றும் சமாதானத்திற்கான எதிர்ப்பார்ப்பு என்ற தொனிப்பொருளில் இந்த முறை அமர்வு இடம்பெறவுள்ளது.
இலங்கையின் அரசியல், நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.