மசாஜ் நிலையம் போர்வையில் விபசார விடுதி – 6 பெண்கள் கைது

356 0

சப்புகஸ்கந்த – மாபிம பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த முகாமையாளர் மற்றும் 6 பெண்களையும் சப்புகஸ்கந்த காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதான பெண்கள் 18 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பொரலஸ்கமுவ, அநுராதப்புரம், அவிசாவளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment