தமிழரசு கட்சி தொடர்பில் சம்பந்தன் சேனாதிராஜா விசேட கலந்துரையாடல்

281 0

இலங்கை தமிழரசு கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று அம்பாறை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பிலான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள்,எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தல் மற்றும் வடமாகாணத்தில் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment