18 புதிய மேம்பாலங்களை அமைக்க திட்டம்

256 0

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 18 புதிய மேம்பாலங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு, கிருலப்பனை, கொம்பனிவீதி உள்ளிட்ட பல இடங்களில் இந்த மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனேமுல்ல, பொல்கஹவெல மற்றும் ராஜகிரியாவில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராய்ச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment