இலங்கை மதுவரி திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளராகத் திருமதி ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலாளராக பதவி வகித்த திருமதி ஹெலன் மீகஸ்முல்லவை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஹெலன் மீகஸ்முல்ல இன்றைய தினம் மதுவரி திணைக்கள ஆணையாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.