வத்தளை – ஹெலகந்த பிரதேசத்தில் 17 ஆயிரம் கிலோ கழிவுத் தேயிலையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கழிவுத் தேயிலை தொகை கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , இந்த சுற்றிவளைப்பு இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு , ஆனமடுவ மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.