முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன இன்று (18) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இம் மாதம் 4ம் திகதி இவர் கொழும்பு கோட்டை முதன்மை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப் பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அபிவிருத்தி லொத்தர் சபைக்குரிய கெப் ரக வாகனமொன்றை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அன்றைய தினம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில் , முன்னாள் பிரதி அமைச்சர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.