தனது விதவை மருமகள் மீது அசிட் வீசி கொலை செய்த மாமனார் தொடர்பான செய்தி கடுவலை – கொரதொட்ட பிரதேசத்தில் தெரியவந்துள்ளது.
34 வயதான அந்த பெண்ணின் மீது அசிட் வீசிய நபரின் வயது 74 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் கணவர் (அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபரின் மகன்) சில வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவர் 7 வயதான பிள்ளையுடன் கணவரின் வீட்டில் மாமா மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு திடீரென அந்த பெண்ணின் மீது திரவம் போன்று ஒன்று விழுவதை உணர்ந்துள்ளார்.
பின்னர் அவருக்கு கடும் வேதனை ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த பெண் அலறியப்படி தனது குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்து, வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் ஏறி மருத்துவனையில் அனுமதியாகியுள்ளமை, அவர் உயிரிழப்பதற்கு முன் காவல்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தில் காணப்படுகிறது.
அவர் கொழும்பு தேசிய மருத்துவனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பிள்ளையும் அசில் தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசிட் தாக்குதலை மேற்கொண்ட 74 வயதான நபரை காவல்துறை கைது செய்துள்ளது.