அஹங்கம – பெலஸ்ஸகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிக்குண்டு காயமடைந்த 6 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கொண்ட ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், அதில் ஒரு பகுதி, இன்று காலை இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்றுவருதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.