கடற்றொழிலுக்காக பயன்படுத்தப்படும் புதிய படகுகளுக்காக கூடுதல் சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வருட பாதீட்டை மையப்படுத்தி இந்த சலுகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடற்றொழிலில் புதிய படகுகளை பயன்படுத்தும் போது , பிடிக்கப்படும் மீன்களின் தொகை அதிகரிக்கும் நிலையில் , அதன்மூலம் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.