பெண்களை போல் ஆடைகளை அணிந்து இரவு நேரங்களில் பண்டாரளை நகரில் நடமாடிய நபரொருவரை பண்டாரவளை காவல்துறை கைது செய்துள்ளது.
23 வயதான குறித்த நபர் கடந்த 16 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இராணுவத்தில் சேவை புரிபவர் என்பதுடன், இவர் மெதவல – உடுகிந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்த வேளை அதில் ஆபாச படங்கள் இருந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
தான் பார்த்த படம் ஒன்றிற்கு அமைய இவ்வாறு பெண்களை போல் ஆடை அணிய நினைத்ததாக சந்தேக நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தம்புள்ளை நகரில் பெண்களை போல் ஆடை அணிந்து நடமாடிய நபரொருவர், அண்மையில் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.