தேர்தல் முறையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் – விஜித்

871 0
இருபது அல்லது அதற்கு அப்பால் சென்று அரசியல் சீர்த்திருத்தம் ஒன்று கொண்டுவந்து தேர்தல் முறையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது பின்பற்றப்படும் தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு புதிய தேர்தல் முறை கொண்டுவரப்பட்டு புதிய பொறுப்புக் கூறும் அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்.
அதற்கு தொகுதிவாரி தேர்தல் முறை கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த தேர்தல் முறையின் மூலம் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சமநிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment