வெலிஒய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மொத்தமாக 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
வெலிஒய ஜனகபுர பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சிலரை கைது செய்வதற்காக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மூன்று காவல்துறையினர் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதலை நடத்திய 14 பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.