ஜெனி­வாவில் இன்று தமிழ் அமைப்­புக்கள் ஆர்ப்­பாட்டப் பேரணி

14510 0

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 36ஆவது கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்­வுகள் இன்று ஆரம்­ப­மா­வதை அடுத்து மனித உரிமைப் பேர­வையின் முன்­றலில் நீதிக்­கான போராட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­து­வ­தற்கு தமிழ் அமைப்­புக்கள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளன.

இந்த ஆர்ப்­பாட்டப் பேர­ணியில் ஐரோப்­பிய நாடுகள் பல­வற்­றி­லி­ருந்தும் பெரு­ம­ள­வான தமி­ழர்கள் கலந்­து­கொள்­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை மனித உரிமைப் பேர­வையின் கூட்டத் தொடரில் இடம்­பெறும் உப குழுக் கூட்­டங்­களில் பங்­பேற்­ப­தற்­கா­கவும் இன்­றைய போராட்­டத்தில் கலந்­து­கொள்ளும் நோக்­கிலும் ம.தி.மு.க.வின் பொதுச் செய­லாளர் வைகோ ஜெனி­வா­வுக்குச் சென்­றுள்ளார்.

நேற்று ஜெனி­வாவைச் சென்­ற­டைந்த வைகோவை ஈழத் தமிழ் அமைப்பின் பிர­தி­நி­திகள் வர­வேற்­றுள்­ளனர். இன்­றைய போராட்­டத்­திலும் அவர் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 16 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் வைகோ ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் பங்­கேற்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பல தட­வைகள் இந்தக் கூட்­டத்­தொ­டரில் பங்கேற்பதற்கு அவர் விண்ணப்பித்திருந்த போதிலும் அவருக்கான விஸா அனுமதி வழங்கப்படவில்லை.

Leave a comment