பத்தரமுல்லைப் பிரதேச அரச அலுவலர்களின் அலுவலக நேரங்களில் நெகிழ்ச்சியினைச் செயற்படுத்தும் முன்னோடித்திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமென அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், கொழும்பு நகரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக முற்செயற்பாட்டுத் திட்டமிடலின் ஆரம்பகட்டமாக பத்தரமுல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் அலுவலர்கள் இன்று திங்கட்கிழமை முதல் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான மூன்று மாத காலத்திற்கு இந்த நெகிழ்வான நேரத்தை திணைக்களத் தலைவரின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் பிரகாரம், காலை 7.30 மணிக்கும் மாலை 5.00 மணிக்குமிடையிலான காலத்தினுள் மோட்டார் வாகன சாரதிகள் 9 மணித்தியால சேவைக் காலத்தினையும், கனிஷ்ட அலுவலர்கள் 8 மணி 45 நிமிட சேவைக் காலத்தினையும், ஏனைய அலுவலர்கள் 7 மணி 45 நிமிட சேவைக்காலத்தினையும் கொண்டதாக நாளொன்றுக்கான வேலை நேரம் இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்சேவை நேரத்தில் அலுவலகத்திற்கு வரும் நேரமானது காலை 7.30 மணிக்கும் 9.15 மணிக்குமிடைப்பட்டதாகவும், அலுவலகத்தை விட்டு வெளியேறும் நேரமானது பிற்பகல் 3.15 மணிக்கும் மாலை 5 மணிக்குமிடைப்பட்டதாகவும் இருத்தல் வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, பொதுமக்களுக்கு சேவை வழங்குவதற்காக சகல அரச அலுவலர்களும் குறிக்கப்பட்ட அலுவலக நேரங்களுக்கு ஏற்ப காலை 9.15 மணி தொடக்கம் பிற்பகல் 3.15 மணிக்கிடையிலான காலத்தினுள் கட்டாயமாக கடமையில் ஈடுபட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, நிறுவனத்தின் நடவடிக்கைகளை தடையின்றி முறையாக நடத்திச் செல்வதற்கு முடியுமான வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்வதன் கீழ் அலுவலர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் என்ற இரு தரப்புக்களினதும் முன் அனுமதியுடன் நெகிழ்ச்சியான அலுவலக நேரத்தில் தனது நிறுவனத்தினுள் செயற்படுத்த நிறுவனத் தலைவர்கள் பொறுப்புடன் இருத்தல் வேண்டுமெனவும் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நெகிழ்ச்சியான அலுவலக நேரத்தினை செயற்படுத்தும் காலப் பகுதியினுள் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் தமக்கு உரிய பொதுவான அலுவலக நேரம் தவிர்ந்த நேரமொன்றினை தமது அலுவலக நேரமாகக் கருதுவதற்கு உடன்பட்ட எந்தவொரு அலுவலருக்கும் அரசாங்க நிர்வாக சுற்றுநிருபத்தின் மூலம்
ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடமைக்கு சமுகமளிக் கும் போதும், கடமை முடிந்து வெளியேறும் போதும் ஏற்ப
டும் தாமதங்கள் மற்றும் அத்தாமதங்களை ஈடுசெய்வதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் பெற்றுக் கொடுத் தல் கூடாதென அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.