மின்சார சபை பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டம்!

447 0
இலங்கை மின்சார சபை பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது.
இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்ற போது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டாலும் மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லையென மின்வலுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மின்சார பணியாளர்களின் 2 நாள் போராட்டம் வேதனத்துடனான விடுமுறையாக கருதப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அமைச்சரால் நேற்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிவிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சேவையாளர்களுக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்களையும் இன்று சேவைக்கு வருகைத்தரும் படியும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment