சில் ஆடை விநியோக மோசடி நடவடிக்கையின் பின்னால், பிரதான பிக்குகள் சிலரும் இருக்கின்றார்களா ? என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.
என்னிடம் காசோலைகள் பல உள்ளன. இருப்பினும், தேரர்களின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டிலுள்ள தேரர்கள் லலித் வீரதுங்காக்கள் போன்றோர் சிறையில் சென்றதற்காகவல்ல வீதியில் இறங்க வேண்டியுள்ளனர். சில் ஆடையை அவர்கள் விநியோகித்தார்கள் என்பதற்காக.
ஏனெனில், இன்னும் கொஞ்சம் காலம் செல்லும் போது காவியுடையையும் தேர்தல் லஞ்சமாக விநியோகிக்க ஆரம்பிப்பார்கள். புத்தபெருமானின் பல்லையும் தேர்தல் இலஞ்சமாக கொடுக்க முற்படுவார்கள் எனவும் அனுர குமாரதிஸாநாயக்க எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.