அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் பௌத்த மகா சங்கத்தினருக்கு எதிராக பேசியது போன்று இந்நாட்டிலுள்ள எமது தமிழ் சமூகத்திலுள்ளவர்களோ, முஸ்லிம் சமூகத்திலுள்ளவர்களோ வரலாற்றில் எப்போதும் பேசியதில்லையென முன்னாள் அமைச்சரும் தற்போதைய மஹிந்த சார்பு குழு பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
அவர்கள் கூறிய வசனங்களை எனது வாயால் கூறுவதற்கு நான் விரும்பவில்லை. என்னுடைய பெயருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டு விடும் எனவும் குமார வெல்கம எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.