இலங்கை தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தின் பட்டப்படிப்பை பிரித்தானிய வைத்திய சபை ஏற்றுக் கொள்வதில்லையென விடுத்திருந்த அறிவிப்புக்கான காரணம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள வைத்திய சபை சைட்டத்தை அங்கீகரிக்காமையே பிரித்தானியாவின் புறக்கணிப்புக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
சைட்டம் மருத்துவக் கல்லூரியை அங்கீகரிப்பது தொடர்பில் மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டுமானால், இலங்கை மருத்துவ சபையின் அங்கீகாரம் சைட்டத்துக்கு கிடைக்கப் பெறல் வேண்டும் எனவும் பிரித்தானிய மருத்துவ சபை நிபந்தனை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரி பிரித்தானிய மருத்துவ சபையின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரித்தானிய மருத்துவ சபையினால் ஏற்றுக்கொள்ளப்படாத மருத்துவப் பட்டப்படிப்பு வழங்கும் பல நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலிலேயே SAITM மருத்துவக் கல்லூரியும் உள்வாங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரித்தானிய மருத்துவ சபையின் PLAB பரீட்சைக்கு முகங்கொடுக்கவோ, அந்நாட்டு மருத்துவ சபையில் பதிவு செய்யவோ குறித்த பட்டியலில் காணப்படும் நிறுவங்களினால் வழங்கப்படும் பட்டப்படிப்பு ஒரு தகைமையாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
SAITM தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்ட மாணவர் ஒருவர் பிரித்தனியாவின் PLAB பரீட்சைக்கு முகங்கொடுக்க விண்ணப்பித்துள்ள அதேவேளை, குறித்த விண்ணப்பத்தை அந்நாட்டு மருத்துவ சபை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.