20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கைவிட்டது அரசாங்கம்

282 0

சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடாத்துதல் உட்பட பல்வேறு திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவிருந்த 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்பொழுது இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தப்பட வேண்டும் என நீதித் துறையினரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்தே இத்தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும் புதன் கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment