நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னான்டோ ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்தது புதுமைக்குரிய விடயமல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரவித்தார்.
சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவே அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறு அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் எதிர்கட்சியுடன் இணைவது ஒன்றும் புதுமையான விடயம் அல்லவெனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.