எதிர்வரும் தேர்தல்கள் அனைத்தும் தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த புதிய முறையில் நடத்த தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவத்தகமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள், புதிய முறையின் கீழ் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அனைத்து கட்சிகளிடமும் குறை நிறைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.