தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் திலீபனின் திருவுருவப் படத்திற்கான பொதுச்சுடரினை ஜனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்தவரும், மாவீரர் ஒருவரின் துணைவியுமான பெண் ஒருவர் ஏற்றிவைத்தார்.
மலர் மாலையினை மாவீரரின் பெற்றோர் அணிவித்தார்.
தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்திற்கு, புதுக்குடியிருப்பு கைவேலி பிரதேசத்தை சேர்ந்த மக்கள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில், நினைவுரையினை புதுக்குடியிருப்பு வணிகர் சங்கதலைவர் செல்வச்சந்திரன் ஆற்றியதுடன், சிறப்புரையினை ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இளங்கதிர் நிகழ்த்தினார்.நினைவேந்தல் நிகழ்வில், கைவேலி முறிகண்டிப் பிள்ளையார் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.