பொலிஸ் துறையினருக்கு தற்போது பல சவால்கள் உள்ளதாக கொழும்பு வடக்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு பொலிஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த கருத்தை வௌியிட்டார்.