பொகவந்தலாவ நகரிலுள்ள வர்த்தக நிலையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை தூள் அடைக்கப்பட்ட 25 என்.சி. டின்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.