கொழும்பு நகருக்குள் சட்டத்தை மதித்து வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு நாளை (18) முதல் விசேட பரிசு வழங்க போக்குவரத்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை கொழும்பு நகருக்குள் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிவில் உடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் இதற்கான கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கண்டறியப்படும் சிறந்த சாரதிகளுக்கு அடையாள ஸ்டிகர் ஒன்று ஒட்டப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விபத்துக்களைக் குறைப்பது இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்திட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை கண்டியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது வெற்றியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.