காணிப்பிரச்சனை தொடர்பில் ஆரயும் குழுக்கூட்டம்

25904 0

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பில் ஆரயும் குழுக்கூட்டம் ஒன்று 16.09.2017 நடைபெற்றுள்ளது.

அரசியலமைப்பு கற்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் தெற்கில் இருந்து சட்டவாளர்கள்,மற்றம்,நில அளவையாளர்கள் வருகை தந்து மூன்று இடங்களில் இந்த ஆராயும் குழுகூட்டம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு,சிலாவத்தை,கிச்சிராபுரம்,முறிப்பு,நாகஞ்சோலை, நீராவி பிட்டியினை சேர்ந்த மக்களுக்கு கிச்சிராபுரம் பொதுநோக்கு

மண்டபத்திலும்,முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல்,முல்லைத்தீவினை சேர்ந்த மக்களுக்கு முல்லைத்தீவு கோவில்குடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்திலும்,கொக்குளாய்,கொக்குத்தொடுவாய்,கருநாட்டுக்கேணி மக்களுக்கு கொக்குளாய் பொதுநோக்கு மண்டபத்திலும் காணிப்பிரச்சனைகள் தொடர்பிலான ஆராய்வு குழுகூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதில் கோவில்குடியிருப்பில் 25 குடும்பங்களும்,கொக்குளாயில் 25 குடும்பங்களும்,கிச்சிராபுரத்தில் 65குடும்பங்களும் முதல் கட்டமாக கலந்து  கொண்டு அரச தனியார் காணிகள் தொடர்பில் நாட்டில் உள்ள சட்டங்களையும் காணிபங்கீடுகளையும் பற்றி எந்தெந்த காணிகளுக்கு எப்படி ஆட்சிசெய்வது பற்றியும், அறிந்து கொண்டுள்ளதுடன் மக்களின் காணிகள் தொடர்பிலான பிரச்சனைகளை முறையிட்டுள்ளார்கள்.

Leave a comment