அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே தவறான பாதையில் பயணிக்கிறது – அருந்திக பெர்னான்டோ

719 0

மக்களுக்கு சேவை செய்வதாக கூறி ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே தவறான பாதையில் பயணிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ இதனை தெரவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, தேசிய கொள்கைகளை உருவாக்குதாக குறிப்பிட்டபோது அது வரவேற்கப்பட்டது.

எனினும் அது தற்போது இடம்பெறுவதில்லை.

அரசாங்க தரப்பில் இருந்து பௌத்த பிக்குமார்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றனர்.

அரசாங்கம் தவறான பாதையில் பயணிக்கின்றது.

எனவே, அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தை கவிழக்க செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment