இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் மியன்மார் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியை இலங்கை அரசாங்கம் நிறுத்திவைத்துள்ளது.
குடிவரவு குடியகழ்வு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ் பி நாவின்ன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் சிறுபான்மையினரான ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துவருகின்றனர்.
இந்த நிலையில், ரொஹிங்கிய முஸ்லிம்கள் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வந்து அகதி அந்தஸ்த்து கோருவதற்கான சந்தர்ப்பம் காணப்படும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, ரொஹிங்கிய முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கையில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்குள் நுழைய முற்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.