எகிப்பதின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் மொர்சிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் இரகசிய தகவல்களை கட்டாருக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012 நடைபெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலில் மொகட் மொர்சி எகிப்தின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற முகமது மொர்சி அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார்.
இதன் பின்னர் அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமுலுக்கு வந்தது.
மொகமட் மொர்சி பதவியில் இருந்த காலத்தில் எகிப்தின் முக்கிய ஆவணங்களை கட்டாருக்கு விற்பனை செய்துள்ளமை கண்டறியப்பட்டது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின்போது மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக மொகமட் மொர்சி மேன்முறையீடு செய்திருந்த நிலையில், அவரது மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.