ஷெங்ரீலா விடுதி போன்ற வேலைத்திட்டங்களை இலங்கைக்கு கொண்டுவருவதன் மூலம் முதலீட்டு வாய்ப்பை அதிகரித்துகொள்ள முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரவித்தார்.
பாரிய முதலீட்டாளர்களை கவருவதற்கு ஷங்ரீலா போன்ற நிறுவனங்களுக்கு பெரும் சலுகைகளை வழங்கி சீனா அவர்களை தமது நாட்டிற்கு அழைத்துவந்தனர்.
இதனை தொடர்ந்து பெரும் முதலீட்டு நிறுவனங்கள் சீனாவுடன் தொடர்புகைள ஏற்படுத்தி முதலீடுகளை ஏற்படுத்தின.
கடந்த காலத்தில் ஜே ஆர் ஜெயவர்தன போன்றவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.
முதலீட்டு அதிகரிப்பிற்காக முதலீட்டாளர்களை கவரும் வகையிலா சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.